அமெரிக்கா-தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி நிறுத்தம்

வாஷிங்டன்:

அமெரிக்கா-தென்கொரியா இடையிலான கூட்டு ராணுவ பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா ராணுவம் மற்றும் தென்கொரியா இடையிலான கூட்டு ராணுவ பயிற்சி வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெள்ளை மாளிகையில் இருந்து விரைவில் வெளியாகும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு நடந்த இந்த பயிற்சியில் 17 ஆயிரத்து 500 அமெரிக்க ராணுவ வீரர்கள், 50 ஆயிரம் தென்கொரியா ராணுவ வீரர்களும் கலந்துகொண்டனர். இந்த பயிற்சி பெரும்பாலும் கணினி சார்ந்ததாகவே இருந்தது. போர் விமானம், டாங்கிகள், ஆயுதங்களை கொண்ட களப்பயிற்சி அதிகளவில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வடகொரியா அதிபர் கிம்-டிரம்ப் இடையிலான பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் சுமூகமாக நடந்து முடிந்துள்ள நிலையில் கூட்டு பயிற்சி நிறுத்தம் தொடர்பான தகவல் கொரியா தீபகர்பத்தில் அமைதியை ஏற்படுத்தும் செயல் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.