வடகொரியா மீதான தடை ஓராண்டிற்கு நீட்டிப்பு….டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்:

வடகொரியாவின் அணு ஆயுதங்களால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதால் அந்நாட்டின் மீதான தடையை ஒரு ஆண்டிற்கு நீட்டித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் யுன் ஆகியோர் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதாக யுன் அறிவித்தார். தென்கொரியாவுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடமாட்டோம் என டிரம்ப்பும் உறுதி அளித்தார்.

இந்நிலையில் வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து அந்நாட்டின் மீதான தடையை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்து அவர் உத்தரவிட்டுள்ளார்.

‘‘சிங்கப்பூர் உச்சிமாநாடு வெற்றி பெற்றதாக தற்பெருமையுடன் டிரம்ப் கூறியதற்கும், தற்போதைய நடவடிக்கைக்கும் அதிக முரண்பாடுகள் இருக்கிறது’’ என்று ஜனநாயக கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

You may have missed