புதுடெல்லி:
ராமர் ஒன்றும் பாஜகவின் சொத்தல்ல என்று காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான  சசி தரூர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர் ராம் மற்றும் சனாதன தர்மம் உலகளாவியுள்ளது. இதனை மந்திரம் சொல்பவர்களோ அல்லது துதிப்பாடல்கள் பாடுபவர்களோ தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று உரிமை கொண்டாட முடியாது என்று பாரதிய ஜனதா கட்சி பற்றி கூறியுள்ளார். மேலும் அவர் பகவான் ராமர் மனிதகுலம் அனைத்திற்க்கும்  சொந்தமானவர் என்றும் இதைப் பற்றி மகாத்மா காந்தியே தெரிவித்துள்ளார் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
இதைப் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சசிதரூர் பதிவிட்டுள்ளதாவது: ராமர் மற்றும் சனாதன தர்மம் உலகளாவியுள்ளது. மந்திரங்கள் சொல்பவர்களோ அல்லது துதிபாடுபவர்களோ இதனை தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று உரிமை கொண்டாட முடியாது. இந்துத்துவத்தை பொறுத்தவரை ராமர் வணங்க வேண்டிய கடவுள். இதனை மகாத்மா காந்தியும் கூட ராமருடைய சிறந்த குணங்களை ஒவ்வொரு நபரும் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதும், பூமி பூஜைக்கு தலைமை தாங்கியதும், ராமரை சொந்தம் கொண்டாடுவது போல் உள்ளது. “ராமர் பாஜகவின் சொத்தல்ல” என்று தெரிவித்துள்ளார்.
பல்லாயிரக்கணக்கான மக்களின் இதயங்களிலும் மனதிலும் ஆழமாக உள்ள சிறந்த மனிதர் ராமர். மகாத்மா காந்தி அவருடைய பாடல்களை இறக்கும்வரை தொடர்ந்து பாடி கொண்டிருந்தார். மேலும் அவருடைய உதடுகள் எப்போதும் ஹே ராம் என்று ஜெபித்துக் கொண்டே இருந்தது. அப்படிப்பட்ட ராமரை யாரும் கடத்திக் கொண்டு தங்களுக்கானவர் என்று உரிமை கொண்டாட இயலாது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் 1992- ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிராக காங்கிரஸ் இருந்தது. பல நூற்றாண்டுகள் பழமையான அந்த மசூதி டிசம்பர் 6, 1992- ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது.
நேற்று அயோத்தியில் கட்டப்படும் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பூமி பூஜை நடத்தி முடிக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.