புதிய கருத்துக்களின் கூடமாகப் பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும்: ஜனாதிபதி

டில்லி

புதிய கருத்துகளின் கூடமாகப் பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் உத்கல் பல்கலைக்கழக 75 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது  நேற்று அந்த விழாவின் நிறைவு நாள் நிகழ்வில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அப்போது அவர் புதிய யோசனைகள் மற்றும் கருத்துக்களின் கூடமாகப் பல்கலைக்கழகங்கள் திகழ வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது உரையில் , ”சமூகத்தில் ஒதுக்கப்பட்ட சமூகத்தினரின் வளர்ச்சியில்  ஆசிரியர்களும் மாணவர்களும் கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.  அத்துடன் சமூகத்தில், சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் கல்வி ஆகிய துறைகளும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் வெண்ணிற கோட்டைகளாக இல்லாமல் பல்கலைக்கழகங்கள் புதிய யோசனைகளின் மற்றும் கருத்துகளின் கூடமாகத் திகழ  வேண்டும். மேலும் அறிவார்ந்த சமூகத்தை தங்கள் ஆய்வில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் அறிவுபூர்வ விவாதங்கள் உருவாவதுடன் மனித சமூகமும் தழைத்தோங்கும்.” எனத் தெரிவித்தார்.