ராஜாத்தி அம்மாள் வீட்டிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த ஆசாமி

--

சென்னை:

சென்னை சிஐடி காலனியில் திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு மர்ம ஆசாமி ஒருவன் துப்பாக்கியுடன் இன்று நுழைந்தான்.

வீட்டில் இருந்த ராஜாத்தியை துப்பாக்கியை காட்டி மிரட்டி நகைகளைப் பறிக்க முயற்சி செய்ததான் இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜாத்தி அம்மாள் சத்தம் கேட்டு போலீஸார் உள்ளே ஓடிவந்து அந்த நபரைப் பிடித்தனர். பெங்களூரைச் சேர்ந்த அந்த நபரை போலீசார் விரட்டிபிடித்தனர். அவனிடம் இருந்து துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர். விசாரணையில் அவன் பெயர் ராஜேந்திர பிரசாத் என்பது தெரியவந்தது.

திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த கனிமொழி இந்த சம்பவம் குறித்து தவலறிந்ததும் அவர் பாதியிலேயே கூட்டத்திலிருந்து வீடு திரும்பினார்.

ராஜேந்திர பிரசாத் தற்போது திருவல்லிக்கேணியில் வசித்து வருகிறார். பல சிறிய திருட்டு வழக்குகள் இவர் மீது உள்ளது. மயிலாப்பூர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அது டம்மி துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது