டெல்லி: ஜூலை 1ம் தேதி முதல் வங்கிகள் இந்த சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்குகிறது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமுடக்கம் நடைமுறையில் உள்ளது. ஊரடங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
பொருளாதாரமும் கேள்விக்குறியான நிலையில் இஎம்ஐ கட்டணம், வங்கி சேவை கட்டணம் போன்றவை 3 மூன்று மாதங்களாக தளர்வில் இருந்தது. அதற்கான அறிவிப்பையும் மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பானது நேற்றோடு காலாவதியாகிவிட்டது. அதாவது, கொரோனா ஊரடங்கையொட்டி வங்கி சேவைகள், ஏடிஎம் கட்டணங்கள் ஆகியவற்றில் அரசு அறிவித்த தளர்வுகள் தற்போது முடிந்துள்ளன.

இதையடுத்து இன்று முதல் மேற்கூறிய சேவைகளுக்கு மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு பெறப்படும் சேவைக் கட்டணம் , குறைந்தபட்ச இருப்பு வைத்திருத்தல், ஆன்லைன் சேவை கட்டணம் போன்றவை இன்று முதல் இவை மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.
பொதுவாக, வங்கிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஏடிஎம் பரிவர்த்தனைகளை இலவசமாக அனுமதிக்கின்றன. பின்னர் கட்டணம் வசூலிக்கத் தொடங்குகின்றன. ஏடிஎம்மில் பணம் எடுப்பதை தவிர, உங்கள் கணக்கு நிலுவைகளையும் சரிபார்க்கலாம். ஒரு மினி ஸ்டேட்மெண்ட்  அறிக்கை பெறலாம், மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றலாம்.
உதாரணமாக, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மெட்ரோ நகரங்களில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மாதத்தில் 8 இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளை வழங்குகிறது. இதில் எஸ்பிஐ ஏடிஎம்களில் இருந்து ஐந்து பரிவர்த்தனைகள் மற்றும் வேறு எந்த வங்கியின் ஏடிஎம்மிலிருந்து மூன்று பரிவர்த்தனைகளும் அடங்கும்.

இதேபோல், மெட்ரோ அல்லாத வாடிக்கையாளர்களுக்கு பத்து இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகின்றன; இதில் எஸ்பிஐ ஏடிஎம்களில் இருந்து ஐந்து மற்றும் வேறு எந்த வங்கி ஏடிஎம்களிலிருந்தும் ஐந்து பரிவர்த்தனைகள் அடங்கும். இலவச ஏடிஎம் பயன்பாட்டு வரம்பு முடிந்த பிறகு, ஒரு வங்கி பண பரிவர்த்தனைகளுக்கு ரூ .20 மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலிக்கலாம்.
பணமில்லாத பரிவர்த்தனைகளுக்கு, ரூ .8 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இந்த கட்டணங்கள் ஜூலை 1 முதல் அமலில் இருக்கும். எச்.டி.எப்.சி வங்கியில், உங்கள் கணக்கில் நீங்கள் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்பு மெட்ரோ மற்றும் நகர்ப்புற கிளைகளில் ரூ .10,000, நகர்ப்புற மற்றும் கிராமப்புற கிளைகளுக்கு இது 5,000 ரூபாய் என்று இருக்கும். பற்றாக்குறையின் அளவின் அடிப்படையில் அபராதம் கட்டணங்கள் கணக்கிடப்படுகின்றன.
பலர் அலுவலகம் மாறும் போதும் அல்லது புதிய நகரங்களுக்கு மாறுவதால் பல வங்கிக் கணக்குகளை வைத்திருக்கிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சில வங்கிகள் இந்த பூஜ்ஜிய இருப்பு சம்பள கணக்குகளை 2 மாதங்களுக்கு பிறகு வழக்கமான சேமிப்புக் கணக்குகளாக மாற்றுகின்றன. ஏனெனில் சம்பள வரவுகள் இல்லை. எனவே, அந்த சம்பளம் அல்லாத சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரித்தால் அபராதங்களை தவிர்க்கலாம்.