புதுடெல்லி:
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய உள்துறை செயலாளர் அஜய் பால்லா மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான தலைமை செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.  அவர் அவர்களுடைய மாநிலங்களுக்குள்ளே பொருட்களோ அல்லது மனிதர்களோ இயங்குவதற்கு எந்தவிதமான அனுமதியோ அல்லது பாஸ்சோ தேவை இல்லை என்று  அக்கடிதத்தில் அஜய் பல்லா குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இரண்டாம் கட்ட தளர்வுகள் துவங்கியுள்ள நிலையில் சில பொருளாதார செயல்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஜூலை 31-ஆம் தேதி வரை முழு அடைப்பு சில விதிமுறைகளுடன் பின்பற்றப்படும்.
இந்த புதிய விதிமுறைகள் மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகத்திடம் கலந்தாலோசித்து அதனடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் மத்திய மற்றும் மாநில நிர்வாகத்தின் பயிற்சி நிலையங்கள் மட்டும் ஜூலை 15ஆம் தேதி முதல் துவங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உள்துறை அமைச்சர் அஜய் பல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் தங்களுக்கு ஏற்றவாறு அந்த விதிமுறைகளை தளர்த்தி கொள்ளக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். தங்கள் மாநிலங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை தவிர மற்ற பகுதிகளுக்கு ஏதேனும் பொருளாதார செயல்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றால் மத்திய அமைச்சகத்தின் அறிவுரைப்படி அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மத்திய அமைச்சகத்தின் அறிவுரைப்படி இந்த இரண்டாம் கட்ட தளர்வுகள் ஜூலை 31ம் தேதி வரை பின்பற்றப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அல்லது பிற பகுதிகளுக்கு, பொருளாதார செயல்பாடுகளுக்கான தளர்வுகள் சிறிது அதிகமாகவே அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.