புவனேஷ்வர்: கொரேரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒடிசா மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவம்பர் 30ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக  அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் தீபாவளிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு  வருகின்றன.இடையிடையே பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. தற்போதைய நிலையில் 90 சதவிகித அளவுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு, மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பி உள்ளது. மேலும். மாநிலங்களில்  தொற்றுப் பரவல் நிலைகளுக்கேற்ப அவ்வப்போது பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.

ஒடிசி மாநிலத்தில். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,470 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,90,116-ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் 14,905 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை  2,73,838 பேர் குணமடைந்து உள்ளனர்.  அதே வேளையில் கொரோனா உயிரிழப்பும்  1,320 -ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஒடிசா மாநில அரசு, பொதுமுடக்கத்தை நவம்பர் 30ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு உள்ளது. மாநிலத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமுடக்கத்தை நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும்,  நவம்பர் 30ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படும் என அறிவித்து உள்ளது.

அதே வேளையில் தீபாவளிக்கு பிறகு   9ம்வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நவம்பர் 16ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் 6வது முறையாக  பல தளர்வுகளையும் அறிவித்து உள்ளது.