பாராளுமன்றம் அருகே ஆளில்லா விமானம்! டில்லியில் பரபரப்பு

டில்லி,

பாராளுமன்றம் அருகே குட்டி விமானம் பறந்ததாக வந்த தகவலை தொடர்ந்து டில்லி மாநில போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீப காலமாக ஆளில்லா விமானங்கள் தலைநகரில் பறப்பது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து ஏராளமான புகார்கள் வந்துள்ள நிலையில், தற்போது பாராளுமன்ற வளாகம் மேலே குட்டி விமானம் ஒன்று பறந்து நோட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் காவல் கண்காணிப்பு அறைக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைநகரில் ஆளில்லா  குட்டி விமானங்கள் பறப்பதாக வரும் தகவல்கள்  டில்லி போலீசாரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி