திருமணம் ஆனவர்களைவிட, ஆகாதவர்களே பெரும்பாலும் மாரடப்பு போன்ற இதய நோய்கள் தாக்கி மரணமடைகிறார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அமெரிக்காவின் அட்லாண்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அர்ஷத் குயுமியு என்ற ஆராய்ச்சியாளர் மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் குறித்தும் அதனால் பாதிக்கப்படுபவர்கள் குறித்தும் ஆய்வு ஒன்றை நடத்தினார். அந்த ஆய்வில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களில் கல்யாணமானவர்களைக் காட்டிலும் கல்யாணம் ஆகாதவர்கள், விவாகரத்தானவர்கள், தனியாக வாழ்பவர்களே பெரும்பாலும் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும்  விரைவாக மரணமடைகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

மாரடைப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் அன்பு, அரவணைப்பு போன்றவை திருமணம் ஆகாதவர்களுக்கு கிடைக்காமல் போவதே இதற்கு காரணம் என்று அவரது ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.

ஆதலினால், திருமணம் செய்வீர்.. சேர்ந்தே வாழ்வீர்!.