உன்னாவ் கொலை வழக்கு: பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு 10 ஆண்டுகள் சிறை!

டெல்லி:

நாட்டையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய உன்னாவ் பாலியல் வழக்கு விசாரணையானது, உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலால் டெல்லி தீஸ் ஹாசாரி நீதிமன்றத்துக்கு மாற்ற நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கார் குற்றவாளி என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில்  குல்தீப் செங்காருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

2017ம் ஆண்டு இளம்பெண் ஒருவரை பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கார் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய சிறுமியின் தந்தையும் செங்கார் மற்றும் அவரது ஆதரவாளர்களால் அடித்து உதைக்கப்பட்ட நிலையில், 2018 ஏப்ரல் 9ம் தேதி நீதிமன்றக் காவலில் இறந்தார்.  கொலை செய்யப்பட்டார்.  இது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, செங்கார் மீதான வழக்கை உச்சநீதி மன்றம் டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து டெல்லி தீஸ்ஹிசாரி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. ஏற்கனவே விசாரணை முடிந்து செங்கார் குற்றவாளி என்று நீதிமன்றம் கூறிய நிலையில் இன்று தீர்ப்பு விவரம் வழங்கப்பட்டது. மாவட்ட நீதிபதி தர்மேஷ் ஷர்மா இன்று தீர்ப்பளித்தார்.

அதன்படி, பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் உட்பட எட்டு குற்றவாளிகளுக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

மேலும், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவரின் குடும்பத்திற்கு தலா ரூ .10 லட்சம் செலுத்துமாறு செங்கர் மற்றும் அவரது சகோதரர் அதுல் செங்கருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்கனவே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கிலும்  செங்காருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது சிறுமியின் தந்தை கொலை வழக்கிலும் செங்காருக்கு 10 ஆண்டு சிறை விதிக்கப்பட்டு உள்ளது.