நியூயார்க்: போரினால் பாதிக்கப்பட்ட 4 நாடுகளில், கடும் பஞ்சம் நிலவக்கூடிய அபாயம் உள்ளதாக எச்சரிக்கிறார் ஐ.நா. பொதுச்சபை செயலாளர் குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காங்கோ, ஏமன், தெற்கு சூடான் மற்றும் வடகிழக்கு நைஜீரியா ஆகிய போரினால் பாதிக்கப்பட்ட 4 நாடுகளில் கடும் பஞ்சம் நேரும் அபாயம் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் பாதுகாப்பு கவுன்சில் கூட்ட உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். “காங்கோ, ஏமன், தெற்கு சூடான் மற்றும் வடகிழக்கு நைஜீரியா ஆகிய நாடுகளில் இந்த 2020ம் ஆண்டு கடும் உணவுப் பஞ்சம் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆனால், அந்நாடுகளுக்கு உதவும் வகையில் தேவையான நிதியாதாரம் நம்மிடம் இல்லை.

இந்த நாடுகளில் பஞ்சம் மற்றும் உணவு பாதுகாப்பின்மை ஏற்படும் அபாயத்துடன் மில்லியன் கணக்கானோரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். இதுதொடர்பாக அவசரகால நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பல ஆண்டுகளாக ஆயுத மோதல்கள் மற்றும் தொடர்புடைய வன்முறைகளைத் தாங்கி, காங்கோ ஜனநாயகக் குடியரசு, ஏமன், வடகிழக்கு நைஜீரியா மற்றும் தெற்கு சூடான் மக்கள் மீண்டும் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் பஞ்சத்தின் அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.

சோமாலியா, புர்கினா பாசோ மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல மோதல்களில் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கிய அறிகுறிகள் இதேபோல் மோசமடைந்து வருகின்றன” என்றுள்ளார் அவர்.