நியூயார்க்: இந்த உலகிற்கு கொரோனா கற்றுத்தந்த பாடத்தை முன்வைத்து, எதிர்காலத்தில் உலக நாடுகள் செயல்பட வேண்டுமென அறிவுரை கூறியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்.

அவர் கூறியுள்ளதாவது, “கொரோனா தொற்றுக்கு முன்பே, நமது சமூகங்களில் ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு, சுற்றுச்சூழல் பேரழிவு, நகரங்கள் சுருங்குதல், போதிய பொது சுகாதார வசதியின்மை, சமவாய்ப்புகள் இல்லாமை ஆகியவற்றால் பாதிப்பை சந்தித்து வந்தன. கொரோனா வைரஸ் தொற்று, சமூகங்களை பாதிக்கும் சவால்களை எடுத்துக்காட்டியுள்ளது.

எனவே, நாம் கடந்த காலத்தை நோக்கி திரும்பிச் செல்ல முடியாது. மாறாக, எதிர்காலத்தை சரியாக செய்வதற்கான உண்மையான வாய்ப்பாக மீட்டெடுத்தலை மாற்ற வேண்டும்.

அதனால்தான் உலகளாவிய புதிய சமூக ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். சர்வதேச மட்டத்தில், ஒரு புதிய உலகளாவிய ஒப்பந்தம் தேவைப்படுகிறது.

அதிகாரம், செல்வம் மற்றும் வாய்ப்புகள் இன்னும் பரந்த அளவில், சமமாகப் பகிரப்படுவதை உறுதிசெய்ய, நியாயமான உலகமயமாக்கல் ஏற்பட வேண்டும்” என்றுள்ளார்.