இந்தியாவை நோக்கி வெட்டுக்கிளிகள் கூட்டம் படையெடுக்க வாய்ப்பு: ஐநா எச்சரிக்கை

நியூயார்க்: இந்திய எல்லை நோக்கி வெட்டுக்கிளிகள் கூட்டம் படையெடுக்க வர வாய்ப்பு உள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது.

2019ம் ஆண்டு இறுதியில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் சோமாலியா, எதியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் 70 ஆயிரம் ஹெக்டர் விளைநிலங்கள் சேதம் அடைந்தன. கென்யாவில் 2,400 கி.மீ. பரப்பிலான மேய்ச்சல் நிலம் பாழானது.

இந் நிலையில் வெட்டுக்கிளிகள் கூட்டத்தை விரட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக ஐநா உணவு விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சோமாலியாவில் இருந்து இந்திய பெருங்கடல் வழியாக இந்தியாவுக்கு வெட்டுக் கிளிகள் விரைவில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலைவனங்களில் வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கம் இப்போது அதிகரிப்பதால் அவற்றின் எண்ணிக்கையும் பன்மடங்காக இருக்கும் என்று எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You may have missed