டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக சந்தானம் வீடியோ இணையத்தில் வைரல் ….!

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் கெரியரை துவங்கியவர் சந்தானம். லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.

சிம்புவின் மன்மதன் படம் மூலம் பெரியதிரையில் அறிமுகமானார் சந்தானம்.

நகைச்சுவை நடிகர்கள் பெரிய ஆளாக வளர்ந்த பிறகு ஹீரோவாக நடிப்பது வழக்கமாகிவிட்டது. அவ்வகையில் சந்தானம் தயாரித்து நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் சந்தானம் பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நான் நல்லா இருக்கிறது புடிக்கலையா உங்களுக்கு, என்னை போய் ஹீரோவா போட்டு படம் எடுக்கிறேனு சொல்றீங்களே என சந்தானம் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.