புதுடெல்லி:

அடுத்து அமையப்போகும் அரசு வலுவான மற்றும் நிலையான அரசாக இருக்காது என, மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


சிஎன்பிஎஸ்சி-டிவி18-க்கு பேட்டியளித்த அவர், “மக்களவை தேர்தலுக்குப் பிறகு ஒரு வலுவான, நிலையான அரசு ஏற்படாது என்ற நிலையில் பாஜக அரசு நிறைவுபெறுகிறது.
மாற்றத்தை நோக்கியே மக்களின் எண்ணமும் உள்ளது. இவ்வாறு ஏற்படும் அரசு இந்தியாவுக்கு நல்லதல்ல.
நாங்கள் எல்லா முடிவுகளையும் துணிந்தே எடுத்தோம். இதனை மக்கள் தவறாக புரிந்து கொண்டதின் விளைவே, சமீபத்தில் பாஜக ஆட்சி செய்த  மாநிலங்களில் தோல்வியை ஏற்படுத்தியது” என்றார்.