பிரபல நாளிதழ் ஆசிரியர் மீது வன்கொடுமை புகார்

நாளிதழ் கட்டுரை -ஏர்போர்ட் மூர்த்தி

சென்னை:

றையர் இன மக்களை இழிவுபடுத்தும்படி எழுதியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழின் பொலிடிகல் எடிட்டர்  சந்த்வானா பட்டாச்சாரியா மற்றும் ஆசிரியர் ஜி.எஸ். வாசு ஆகியோர் மீது புரட்சித்தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்த ஏர்போர்ட் மூர்த்தி தெரிவித்ததாவது:

“கடந்த 06.11.2017 அன்றுஇந்திய பிரதமர் நரேந்திரமோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னை வந்தபோது  தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதியைச் சந்தித்தார்.

மேற்படி செய்தி குறித்து கடந்த 10.11.2017அன்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிழதழ் பக்கம் எட்டில் அதன் பொலிடிகல் எடிட்டர்  சந்த்வானா பட்டாச்சாரியா என்பவர் கட்டுரை எழுதியுள்ளார். அதில், “ The dmk is no longer a political pariah for Modi and his party. Such realignments are well thoutht out and are part of a bigger plan”   என்று எழுதியிருக்கிறார்.

புறக்கணிக்கப்பட்டவன், சமூகத்தால் அங்கீகரிக்கப்படாதவன், நம்பகத்தன்மையற்றவன் தீண்டத்தகாதவன், கீழ்சாதிக்காரன் என ஆங்கிலத்தில் பொருள் படும்  pariah  என்ற வார்த்தையை… தமிழகத்தில் வாழும் லட்சக்கணக்கான பறையர் இன மக்களை இழிவு படுத்தவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் எழுதியுள்ளார்.

கடந்த 1995ம் ஆண்டு சுப்பிரமணியன் சுவாமி, ஒரு அறிக்கையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை “international pariah’ என்று கூறி பறையர் இன மக்களை இழிவு படுத்தினார்.  இதை எதிர்த்து பறையர் மக்கள் போராடினோம். சுப்பிரமணியன் சுவாமி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதை நன்கு தெரிந்த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின்  சந்த்வானா பட்டாச்சார்யா, தமிழ்நாட்டில் சாதிய பிரச்சினையை தூண்டும வகையில் எழுதியிருக்கிறார். அதை வேண்டுமென்றே அப்பத்திரிகையின் ஆசிரியர் ஜி.எஸ்.வாசு வெளியிட்டுள்ளார்.

ஆகவே இவர்கள் இருவர் மீது ம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்” என்று ஏர்போர்ட் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.