எல்லைமீறி பேசிய மராட்டிய மாநில பா.ஜ. அமைச்சர்

மும்பை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உடலில் வெடிகுண்டை கட்டி, அவரை வேறுநாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று பேசியுள்ளார் மராட்டிய மாநில அரசின் அமைச்சர் பங்கஜா முண்டே.

இந்திய விமானப்படை பாகிஸ்தானில் நடத்தியதாக சொல்லப்படும் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவதைப் பற்றி பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார்.

மராட்டிய மாநில பாரதீய ஜனதா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மாநில பாரதீய ஜனதா தலைவர் ராவ்சாகேப் தான்வே ஆகியோர் உடனிருக்க, இதைக் கூறியுள்ளார் பங்கஜா முண்டே.

“சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்பது என்ன? அதை நடத்தியது யார்? என்கின்றனர் எதிர்க்கட்சிகள். எனவே, ராகுல் காந்தியின் உடம்பில் வெடிகுண்டைக் கட்டிவிட்டு, அவரை வேறொரு நாட்டிற்கு அனுப்பினால்தான், அவர்களால் ராணுவம் நடத்திய தாக்குதலைப் புரிந்துகொள்ள முடியும்” என்றார்.

– மதுரை மாயாண்டி

கார்ட்டூன் கேலரி