supreme court
திருமணமாகாத தாய்மார்கள் சட்டப்படியான பாதுகாவலராக இருக்க முடியும். தந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை : உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
திருமணமாகாத தாய்மார்கள் இந்தியாவில் எளிதாக இருந்தது இல்லை, இனியும் நீண்ட காலத்திற்கு அதுபோல் இருக்க ஒருவேளை வாய்ப்பு இல்லாமல் போகலாம். அவர்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறந்துள்ளது. ஆம். உச்சநீதிமன்றம் அவர்களது வாழ்க்கையை கொஞ்சம் எளிதாக்கியுள்ளது. மணமாகாத ஒரு தாய் தனது குழந்தையின் உயிரியல் தந்தையினுடைய ஒப்புதல் வேண்டியோ, அல்லது குழந்தையை ஒரே பாதுகாவலராக இருந்து தான் வள்ர்ப்பதற்கு அந்தத் தந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்தவோ இனி அவசியம் இல்லை என்று இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு, ஒரு திருமணமாகாத தாய் தனது குழந்தையின் பாதுகாப்பு பொறுப்பிற்கு தந்தையின் அடையாளத்தை அறிவிக்க வேண்டும் என்ற வழக்கில் நடந்த நீதிமன்றம் மற்றும் தில்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஒதுக்கித் தள்ளியுள்ளது.
இந்தத் தீர்ப்பை வழங்கும்போது, உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி விக்ரம்ஜித் சென், குழந்தையின் நலத்திற்கு முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டிய விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் அதை முற்றிலும் மறந்துவிட்டது என்று கூறினார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஒரு பெண் அரசாங்க அதிகாரியின் மனுவிற்குப் தீர்ப்பாய் வந்துள்ளது. அவரது குழந்தையின் உயிரியல் தந்தைக்கு அந்தக் குழந்தை இருப்பது கூடத் தெரியாது என்றும் அவர் தன்னுடன் ஒரு சில நாட்கள் மட்டுமே தங்கியிருந்ததாகவும் கூறினார். தனது குழந்தையின் வளர்ப்பில் குழந்தையின் தந்தை இதுவரை எதுவும் செய்யாததால், அவரது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை என்று குழந்தையின் தாய் கூறி விண்ணப்பம் கொடுத்துள்ளார்.

2014 அக்டோபரில், மும்பை உயர் நீதிமன்றம், தன்னுடைய மாற்றாந்தந்தையின் பெயர் தனது பாஸ்போர்ட்டில் இருக்க வேண்டும் என விரும்புவதாகவும் தனது உயிரியல் தந்தையின் பெயர் வேண்டாம் எனவும் ஒரு பெண் மனு கொடுத்தார்.
அந்த நீதிமன்றம் வெளிவிவகார அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், மணமாகாத தாயாக இருந்தால் என்ன நடக்கும் என்று கேட்டது. பாஸ்போர்ட் கையேட்டை மேற்கோளிட்டு, மணமாகாத தாய் தான் எப்படி கர்ப்பவதியானாள் என்பதை ஒரு வாக்குமூலம் தாக்கல் செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் பூர்ணிமா பாட்டியா பதிலளித்தார். வக்கீலின் கருத்துப்படி, அந்த மனுவில், அவள் குழந்தையின் உயிரியல் தந்தையை ஏன் அடையாளம் கூற விரும்பவில்லை என்று கூறயிருக்க வேண்டும். பின்னர், இந்தக் கருத்து அரசாங்கத்தினுடையது அல்ல என்றும் இது போன்ற பாலின பாகுபாட்டை அரசாங்கம் சகித்துக் கொள்ளாது எனவும் மத்திய அரசு கூறியது.

எடுத்துக்காட்டு படம்

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு திருமணமாகாத தாய்மார்கள் பல தசாப்தங்களாக அனுபவித்து வரும் பாகுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஒரு ஆணின் துணை இல்லாமல் தங்கள் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று முடிவெடுத்ததால் மட்டுமே அவர்கள் இவ்வளவு காலமும் ஒதுக்கப்பட்டு அலட்சியம் செய்யப்பட்டுள்ளனர். தனியாகக் குழந்தைகளை வலர்க்கும் தாய்மார்கள் பெரும்பாலான பெற்றோர்களை விட மோசமாக திண்டாடுகிறார்கள்; அவர்கள் ஒவ்வொரு முடிவையும் தனியாக எடுத்துத் தங்கள் குழந்தைகளை உயர்த்தும் பொறுப்பில் வெற்றி பெறுகின்றனர்.

கரு உருவாகுதற்கு மட்டுமே பங்களித்த விந்தின் மூலத்தைத் தெரிந்து கொள்ள எண்ணுவது அந்தத் தாய்மார்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் மதிப்புக் குறைவானது. உயிரியல் தந்தைக்கு குழந்தையின் வாழ்க்கையில் வேறு எந்தவொரு பங்கும் இல்லை என்றால், அவரது அடையாளத்தை ஏன் அறிந்து கொள்ள வேண்டும்?