லக்னோ:

உத்திரப் பிரதேச மாநிலத்தின் கடன் தொகை வரும் மார்ச் மாதத்தில் 4 லட்சத்து 73 ஆயிரம் கோடியை எட்டும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.


உத்திரப் பிரதேச சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து ராஜேஸ் அகர்வால் கூறியதாவது:

வருடாந்திர பட்ஜெட்டின் வரம்பு 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்களில் பிரதிபலிக்காது.

வரும் மார்ச் 31 ம் தேதியில் மாநில கடன் சுமை 4 லட்சத்து 73ஆயிரத்து 563 கோடியாக இருக்கும். இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, 2.5 மடங்கு அதிகமாகும்.

மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2009-10-ல் 38.6 சதவீதமாக இருந்தது. 2014-15-ல் 27.9 சதவீதமாக குறைந்தது. 2020 மார்ச்சில் இதன் மதிப்பீடு 30 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட்டில் 46 ஆயிரம் கோடி பற்றாக்குறையாக உள்ளது. 84 ஆயிரத்து 160 கோடி அரசு ஊழியர் சம்பளத்துக்கும், 38 ஆயிரத்து 476 கோடி பென்ஷனுக்கும் செலவிடப்பட்டுள்ளது என்றார்.