உ.பி: 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கொள்ளையர்கள்!

போபால்:

உ.பி. தலைநகர் லக்னோவின் புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் அந்த வீட்டின் சிறுமியை கடத்தி சென்று கற்பழித்துள்ளனர்.

rape-reu-759

உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் அருகில்  உள்ள புறநகர் பகுதியில் சம்பவத்தன்று இரவு  ஒரு வீட்டில்  6 கொள்ளையர்கள்  புகுந்து பயங்கர ஆயுதங்களை காட்டி  பொருட்களை கொள்ளையடித்தனர்.

பொருட்களை மூட்டையாகக் கட்டிக் கொண்டு புறப்பட்ட போது, கொள்ளையர்கள் கண்ணில் அந்த வீட்டை சேர்ந்த 12 வயது சிறுமி தென்பட்டாள்.  கொள்ளையர்கள் அந்த சிறுமியை கத்தி முனையில் மிரட்டி கடத்தி தூக்கி சென்றனர்.

கொள்ளையர்கள் சென்றதும் அதிகாலையில், அந்த குடும்பத்தினர் கொள்ளையர்களால் கடத்தப்பட் சிறுமியை தேடி அலைந்தனர்.  அப்போது ஊருக்கு வெளியே உள்ள  வயல் பகுதியில் மயங்கிய நிலையில்  அந்த சிறுமி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பெற்றோர் மயங்கிய நிலையில் இருந்த  அந்த சிறுமியை மீட்டு லக்னோவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விசாரணையில்,  திருடர்களில்  நாலைந்து பேர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது. தெரிய வந்தது. அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.