லக்னோ: பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தில், கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும், கடந்த 20 நாட்களில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள அவலம் அரங்கேறி உள்ளது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், கடந்த புதன் கிழமை சேர்ந்த 3 வயது சிறுமி  திடீரென மாயமானார். அவரை பெற்றோர்கள் தேடி வந்த நிலையில், காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது.

காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், கிராமத்திற்கு வெளியே அரை கிலோ மீட்டர் தூரத்தில், உள்ள  கரும்பு வயலில் சிறுமி உடல் கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையின் உடல் பிரதே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அந்த பிஞ்சு குழந்தை வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக  அதே கிராமத்தில் வசிக்கும் லெக்ராம் என்ற நபரை தேடி வருகின்றனர்.

லக்கிம்பூர் மாவட்டத்தில் மட்டும்  இது மூன்றாவது சம்பவம் என்று கூறப்படுகிறது.  இதற்கு முன்பு  13 வயது சிறுமி ஒருவரும்,  17 வயது சிறுமி ஒருவரும் பாலியல்  வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், 3வயது பிஞ்சு குழந்தையும் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியம் சம்பவங்களில் யோகி ஆதித்யநாத் அரசு மீது  கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பாலியல் கொலைகள் தொடர்பாக வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருவதாக கூறிய காவல்துறை அதிகாரி சத்யேந்திர குமார் சிங்,  குற்றவாளிகளை பிடிக்க 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு  விசாரணை  நடைபெற்று வருகிறது, குற்றவாளியை  தேடி வருகின்றனர். நானே தேடல் பணியில் ஈடுபட்டேன். தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது, கடும் தண்டனை கிடைக்கும் வரை ஓய மாட்டேன். தேவைப்பட்டால் தேசியப் பாதுகாப்புச் சட்டமும் குற்றவாளி மீது பாயும் என்றும் கூறி உள்ளார்.