லக்னோ:

உ.பி. சட்டமன்றத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. 7 கட்டங்களாக நடைபெறும் உ.பி. சட்டமன்ற தேர்தலில் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை  காலை 7 மணிக்கு தொடங்கியது

முதல்கட்டமாக 73 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், மக்கள் வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர்.

உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது.  அங்கு மும்முனை போட்டி நடக்கிறது. தற்போது ஆட்சியில் இருக்கும் சமாஜ்வாதி கட்சி காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. மேலும்,  பா.ஜக., பகுஜன் சமாஜ், ஆகிய கட்சிகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இன்று(பிப்.,11) தொடங்கி, மார்ச், 8 வரை, ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதையடுத்து  மார்ச், 11ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

முதல்கட்டமாக இன்று  73 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில்  15 மாவட்டங்களைச் சேர்ந்த, 2.6 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள்.

73 தொகுதிகளில்   839 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

26 ஆயிரத்து, 823 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன.