யோத்தி

உத்திரப் பிரதேச பாஜக அரசு அயோத்தி நகரில் பசுக்களைக் குளிரில் இருந்து பாதுகாக்கச் சணல் கோட்டுக்களை அளிக்க உள்ளது.

வட இந்தியாவில் தற்போது கடும் குளிர் தொடங்கி உள்ளது.  இந்த குளிர்காலத்தில் மனிதர்கள் மட்டுமின்றி கால்நடைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.  இதையொட்டி பசுக்களின் பாதுகாப்புக்கு முதலிடம் வழங்கும் உத்திரப் பிரதேச பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.

முதல் கட்டமாக இந்த திட்டம் அயோத்தி நகரில்  அமல்படுத்த உள்ளது.   அயோத்தி நகராட்சி ஆணையர் நிராஜ் சுக்லா, குளிர் காலத்தை முன்னிட்டு நாங்கள் பசுக்களுக்குக் கோட்டுக்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இத் திட்டம் மூன்று அல்லது நான்கு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட உள்ளது.

பைஷிங்பூரில் உள்ள 1200 கால்நடைகளில் 100 பசுக்களுக்கு கோட்டுகளுக்கு ஆணை அளித்துள்ளோம்.  இந்த கோட்டுக்கள நவம்பர் மாத இறுதியில் எங்களுக்கு வந்து சேரும். இந்த  பசு கோட்டுக்கள தயாரிக்க கோட் ஒன்றுக்கு ரூ.250-300 செலவாகும்.

அத்துடன் கன்றுக்குட்டிகளுக்கு மூன்று அடுக்கு கோட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. கடும் குளிரில் கன்றுகளைப் பாதுகாக்கச் சணல் தவிர, உட்புற அடுக்கில் மென்மையான ஆடைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். பசு மாடுகள் மற்றும் காளைகளுக்கான கோட்டுகள் தனித்தனி வடிவமைப்புடன் இருக்கும்.

பசுக்களுக்கும் காளைகளுக்குச் சணலால் செய்யப்பட்ட கோட்டுகள் இருக்கும்.   மேலும் பசுக்களை கடும் குளிரில் இருந்து காப்பாற்றப் பசுக்கள் இருக்கும் இடத்தில் நெருப்பு வைக்கப்பட்டிருக்கும். அது மட்டுமின்றி கால்நடைகள் அமர, வைக்கோல் தரையில் வைக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.