ஒட்ட வைக்க முடியாத அளவு துண்டான பாஜக அமைச்சரின் கை விரல் 

முசாபர்நக்ர்

த்திரப் பிரதேச பாஜக அமைச்சர் ஸ்வதந்திர தேவ் சிங்கின் விரல் துண்டாகி ஒட்ட முடியாத அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தின் பாஜக தலைவரான ஸ்வதந்திர தேவ் சிங் அம்மாநிலத்தின் அமைச்சரும் ஆவர். அமைச்சர் நேற்று முசாபர் நகரில் நட்னத ஒரு விழாவுக்காகத் தனது வாகனத்தில் சென்றுள்ளார். அமைச்சரை வரவேற்க அங்கு ஏராளமான பெண் தொண்டர்கள் கூடி இருந்தனர். அவர்கள் மாலையுடன் முண்டியடித்து அமைச்சரின் வாகனத்துக்கு அருகே சென்றனர்.

ஸ்வதந்திர தேவ் சிங் வாகனத்தை விட்டு இறங்கும் போது கதவில் வலது கை சுண்டுவிரல் சிக்கி துண்டாகி கீழே விழுந்தது. இதனால் அவர் வலியில் துடித்துப் போன போதிலும் துண்டான விரலைத் தேடி உள்ளார். ஆனால் அது உடனடியாக கிடைக்கவில்லை. பாஜக தொண்டர் ஒருவர் அந்த விரலைத் தேடிக் கண்டுபிடித்துள்ளார். அந்த விரலில் அவர் அணிந்திருந்த மோதிரம் காணாமல் போய் உள்ளது.

அமைச்சர் ஸ்வதந்திர தேவ் சிங் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். துண்டான விரலை மீண்டும் ஒட்ட வைக்க மருத்துவர்கள் இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆயினும் விரல் அதிகமாகப் பாதிப்படைந்திருந்ததால் ஒட்டவில்லை. அதன் பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டு அமைச்சர் திரும்பி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: BJP minister, finger chopped, heavy damage, up
-=-