லக்னோ:

பாரதிய ஜனதா ஆட்சி செய்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே  மாநில பாஜக தலைவர்கள், சட்டமன்ற பிரதிநிதிகள் மீது பாலியல் தொடர்பான வழக்குகள் உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிஸ்ஸாலி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் குஷாகரா சாகர். இவர்மீது அவரது வீட்டில் வேலை செய்து வரும் பெண்மணியின் 15 வயது மகள் புகார் கூறி உள்ளார்.

குஷாரா சாகருக்கும், வேறொரு பெண்ணுக்கும் வரும்  ஜூன் 17-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில்,  பாதிக்கப்பட்ட சிறுமி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அந்த இளம்பெண்  கொடுத்துள்ள புகார் மனுவில், குஷாகரா சாகர் எம்எல்ஏ. தன்னை  திருமணம் செய்து கொள்வதாக கூறி, சிறுமியென்றும் பாராமல் பாலியல்  பலமுறை பாலியல் வன்புணர்வு செய்தார். இதுகுறித்து அறிந்த அவரது உறவினர்கள், தன்னை அவருக்கே திருமணம் செய்து வைப்பதாக  கூறினார்கள். ஆனால், அற்போது அவருக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயமிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக,  தனக்கு 20 லட்சம் ரூபாய் பணம் தருகிறோம், ஒதுங்கிக் கொள் என்று என்னை மிரட்டுகிறார்கள் என்றும்,  குஷாரா சாகரால், தான் கேலிப்பொருளாக  சமுதாயத்தில் ஆகி விட்டதாகவும், தனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும்  கூறி உள்ளார்.

குஷாரா சாகரின் தந்தையான யோகேந்திர சாகர் அந்த பெண்ணை மிரட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் முன்னாள் எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், குஷாரா சாகர் எம்எல்ஏவை  இன்னும் கைது செய்யவில்லை  என்று கூறப்படுகிறது.

மீபத்தில், உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப்சிங் செங்கார் வன்கொடுமை செய்த விவகாரம்  நாடுமுழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், நீதிமன்றம் தலையிட்டு, குல்தீப் சிங் செங்காரை கைது செய்தது. சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு பாரதியஜனதா எம்எல்ஏமீது பாலியல் குற்றச்சாட்டு வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான  பாலியல் வன்கொடுமைகள் என்றாலே குற்றவாளிகள் பாரதியஜனதா கட்சியை சார்ந்தவர்கள்தான் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது