லக்னோ:

உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 165 பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தோல்வியடைந்துள்ளனர்.


உத்திரப் பிரதேச மாநிலத்தில் மாணவர்கள் காப்பி அடித்து எழுதுவதாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து, காப்பியடிப்பதை தடுக்க அங்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நடைபெற்ற பத்தாம் வகுப்பு வாரியத் தேர்வில், 165 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட பாஸாகவில்லை.
388-கும் அதிகமான பள்ளிகளில் 20 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சியடைந்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வின் போது, காப்பியடிப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதே, தேர்வு முடிவுகள் இவ்வாறு மாறியதற்கு காரணம் என உத்திரப் பிரதேச பள்ளித் தேர்வு வாரிய இயக்குனர் வினய் குமார் பாண்டே தெரிவித்தார்.

முந்தைய காலங்களில் மாணவர்களை காப்பியடிக்க வைத்து தேர்ச்சியை அதிகரித்துக் காட்டிய 13 பள்ளிகளில் இம்முறை ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.