உத்திரப் பிரதேசம் : மூன்று பெண்களை மணந்த தொழிலதிபர்

க்னோ

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர் மூன்று பெண்களை மணந்து ஏமாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு ஜெமினி கணேசன் நடித்தும் பிறகு ஜீவன் நடித்தும் வெளியான நான் அவனில்லை படம் பலருக்கு நினைவிருக்கலாம்.   இந்தப் பட கதாநாயகன் பல பெண்களை மணந்து ஒருவரைப் பற்றி மற்றவருக்கு தெரியாமல் ஏமாற்றுவார்.   உத்திரப் பிரதேச மாநிலத்தில் அதே போல் ஒருவர் மூன்று பெண்களை ஏமாற்றி உள்ளார்.

உத்திரப்பிரதேசத்தில் வசிக்கும் தொழிலதிபர் சமீர்.    இவர் தனது மனவி அஃப்ஷா உடன் வசித்து வந்தார்.   இவர் தனது கணவன் மீது சந்தேகம் கொண்டுள்ளார்.  அடிக்கடி சமீருக்கு ஒரு பெண்ணிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.   நேகா என்னும் அந்தப் பெண் அழைப்பதை கண்டுள்ள அஃப்ஷா கணவருக்கு தெரியாமல் நேகாவின் தொலைபேசி எண்ணை கண்டு பிடித்து அவருடன் பேசி உள்ளார்.

நேகா தான் சமீரின் தம்பி மனைவி என்றும் இதுவரை சமீரை பார்த்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார்.   அத்துடன் சமீரின் தொலைபேசி எண்ணை தனது கணவர் எண் எனவும் சொல்லி உள்ளார்.   மேலும் சமீர் தனது வங்கி கணக்குகளில் இருந்து பல கணக்குகளுக்கு பணத்தை மாற்றி உள்ளது அஃப்ஷாவுக்கு தெரிய வந்துள்ளது.

இது குறித்து சமீரிடம் கேட்ட போது அவர் விளையாட்டாக சொல்வது போல் ”எனக்கு 9 மனைவிகள் உள்ளனர்.  நீ அதில் ஏழாவது மனைவி” என சொல்லி உள்ளார்.   ஆனால் அஃப்ஷாவுக்கு அது விளையாட்டுப் பேச்சாக தோன்றவில்லை.   அப்போது அவருக்கு முக நூல் மூலம் ஒரு பெண் நட்பு அழைப்பு விடுத்துள்ளார்.   யாஸ்மின் என பெயருடைய அந்தப் பெண் தானும் சமிரின் மனைவி என கூறி உள்ளார்.

இருவரும் சந்தித்து வெளியூர் சென்றிருந்த சமீர் வந்ததும் காவல்துறையிடம் இருவரும் புகார் அளித்துள்ளனர்.   காவல் துறையினரிடம் சமீர், “நான் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவன்.   நான் என் மனைவியிடம் வேடிக்கையாக 9 திருமணம் செய்துள்ளதாக கூறினேன்.   இது வரை நான் மூவரை மட்டுமே திருமணம் செய்துக் கொண்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.   காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.