லக்னோ:

த்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

காலை 10 மணி  நிலவரப்படி கோரப்பூர்  தொகுதியில் பாஜக முன்னிலை வகித்து வருவதாக கூறப்படுகிறது. மற்றொரு தொகுதியான பஹல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் முன்னிலை வகித்து வருவதாக கூறப்படுகிறது.

உ.பி. மாநிலத்தில்  உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற காரணத்தால், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதன் காரணமாக   கோராக்பூர் தொகுதி காலியானது,. அதேபோல் கேசவ்பிரசாத் மவுரியா துணை முதல்வராக பதவியேற்றதால் பஹல்பூர் நாடாளுமன்ற தொகுதி காலியானது.

கோரக்பூர் தொகுதிக்கு பாஜக சார்பில் உபேந்திரா தத் சுக்லாவும், பஹல்பூர் தொகுதிக்கு குசலேந்திரா சிங் பட்டேலும் போட்டியிட்டனர்.

இந்த இரண்டு தொகுதிகளுக்குமான தேர்தல்  வாக்குப்பதிவு கடந்த 11ந்தேதி  நடந்தது. தற்போது இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று  தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. அதுபோல முலாயம் கட்சிக்கு, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடக்கத்தில் இரு தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகித்து வந்த நிலையில், காலை 10 மணி நிலவரப்படி கோரக்பூர் தொகுதியில் பாஜகவும், பஹல்பூர் தொகுதியில் சமாஜ்வாதி பார்ட்டியும் முன்னிலை வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.