பசிக்குக் கேட்டது உணவு…  பெண்ணுக்குக் கிடைத்ததோ மணவாழ்க்கை.. ..

--

பசிக்குக் கேட்டது உணவு…  பெண்ணுக்குக் கிடைத்ததோ மணவாழ்க்கை.. ..

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்த பெண்ணுக்கு முதலில் ‘காதல் பிச்சையும்’’ பின்னர் ‘வாழ்க்கை பிச்சையும்’’ கிடைத்த ஒரு அபூர்வ சம்பவம்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வருபவர்,அனில்.

ஊரடங்கில் பசியால் வாடும் பிச்சைக்காரர்களுக்கு அந்த ரியல் எஸ்டேட் அதிபர் தினமும், தனது டிரைவர் அனில் மூலம் உணவு கொடுத்து அனுப்புவார்.

 அந்த உணவை சாலை ஓரங்களில் பிச்சை எடுப்போருக்கு தானம் செய்வார், அனில்.

அவரிடம் பிச்சை பெற்றவர்களில் நீலம் என்ற பெண்ணும் ஒருவர்.

தந்தையை இழந்த அந்த பெண் சொந்த அண்ணன் வீட்டை விட்டு துரத்தியதால், ரோட்டுக்கு வந்து விட்டார்.

சாலையில் வரிசையாக காத்திருக்கும் கூட்டத்தோடு சேர்ந்து இவரும் பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.

நீலத்தின் கதை கேட்ட, அனில் உருகிப் போனார். மனதைப் பறி கொடுத்தார்.

இருவரிடையே ஏற்பட்ட பரஸ்பர அன்பு, காதலாகக் கனிந்தது.

ஊரடங்கால் வலுப்பெற்ற அவர்களின் 60 நாள் காதல், கல்யாணத்தில் முடிந்துள்ளது.

 ஆம்.

அங்குள்ள ஆசிரமம் ஒன்றில் நீலத்தின் கழுத்தில் தாலி கட்டி அவரை மனைவியாக கரம் பிடித்தார், கார் டிரைவர் அனில.

– ஏழுமலை வெங்கடேசன்