உ பி முதல்வர், துணை முதல்வர்கள் சட்டசபை மேலவை உறுப்பினராக பதவி ஏற்பு

க்னோ

த்திரப்பிரதேச முதல்வர் யோகி மற்றும் துணை முதல்வர்கள் சட்டசபை மேலவை உறுப்பினராக பதவி ஏற்றனர்.

சமீபத்தில் உத்திரப் பிரதேச சட்டசபை மேலவை உறுப்பினர்களாக முதல்வர் யோகி அமர்நாத், துணை முதல்வர்கள் தினேஷ் ஷர்மா மற்றும் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.

இன்று லக்னோவில் திலகர் ஹாலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இவர்கள் மூவரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.  இவர்களுடன் சுதந்திரதேவ் சிங் மற்றின் மோசின் ராஸா ஆகியோரும் பதவி ஏற்றனர்.  இவர்களுக்கு மேலவை தலைவர் ரமேஷ் யாதவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.