உ.பி.யில் பசு பாதுகாப்பு முகாம்! யோகி உத்தரவு

--

லக்னோ,

.பி. மாநிலத்தில் 7 மாவட்டங்களில் பசு பாதுகாப்பு மையம் அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உ.பி.யில் பாரதியஜனதாவின் யோகி தலைமையிலான அரசு அமைக்கப்பட்ட பிறகு பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில், வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று  அதிகாரிகளுடன் முதல்வர் யோகி  நடத்திய கூட்டத்தை தொடர்ந்து, பசுக்கள் பாதுகாப்புக்கு முகாம்களை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

உ.பி.யில் பந்தல்கந்த் பகுதியில் உள்ள 7 மாவட்டங்களில் உள்ள 16 நகராட்சிகளில் பசு பாதுகாப்பு முகாம் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.