லக்னோ,

ரசு ஊழியர்கள் வருமான வரிவிவரங்களை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய உ.பி. முதல்வர் அதிரடியாக அறிவித்து உள்ளார்.

.நடைபெற்று முடிந்த உ.பி. சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று பாரதியஜனதா ஆட்சியை பிடித்தது. அதைத்தொடர்ந்து உ.பி. முதல்வராக சாமியார் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றார்.

பதவி ஏற்றதும், அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று அதிரடியாக அறிவித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அரசு ஊழியர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று மற்றொரு அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.

நேற்று மாநில அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், வருமான வரி செலுத்திய விவரங்களை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வரின் அறிவிப்பு உ.பி.யில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.