லக்னோ:

யோகி ஆதித்யாநாத் பதவி ஏற்பு விழாவில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உ.பி. சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியும், அகிலேஷ் யாதவ், முலாயம் ஆகியோர் காரசார குற்றச்சாட் டுக்களை மாறி மாறி சுமத்திக் கொண்டனர். சமாஜ்வாடி, காங்கிரஸ, மாயாவதி ஆகியோர் ஊழலுக்கு புகழ் பெற்றவர்கள் என்று மோடி பிரச்சாரம் செய்தார்.

அதேபோல் குஜராத் கழுதைகளுக்கு அமிதாப்பச்சன் வக்காலத்து வாங்க வேண்டாம் என்று அகிலேஷூம், மோடியை தாக்கி பேசினார். அமித்ஷா, மோடியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்று யோகி ஆதித்யாநாத் இன்று முதல்வராக பதவி ஏற்றார். கன்சிராம் ஸ்ம்ரிதி உப்பவின் 90 நிமிடங்கள் நடந்த இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சி அகிலேஷ் யாதவ், முலாயம் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இருவரும் மோடியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அகிலேஷ் தோளில் மோடி கையை போட்டு தட்டிக் கொடுத்தார். முலாயம் சிங்கின் கைகளை பற்றி மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த விழாவில் மாயாவதி கலந்து கொள்ளவில்லை.