மதத் துவேசம் வேண்டாம்- உ.பி முதலமைச்சருக்குத் தந்தை அறிவுரை!

 

ராஞ்சி,

உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் மதமாச்சரியம் அற்று செயல்படுவேண்டும் என அவரது தந்தை ஆனந்த் சிங்பிஸ்ட் அறிவுறுத்தியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றிய அவர் தற்போது ஓய்வு பெற்றுள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு தனது மகன் ஆதித்யநாத் குறித்து ஆனந்த் சிங் பேட்டியளித்தார்.

அப்போது, அனைத்து மதங்களுக்கும் ஆதித்யநாத் மரியாதை அளிப்பார் என தான் நம்புவதாக கூறினார்.

வளர்ச்சியை தன் மகன் விரும்புவார் என்றும் தனது லட்சியத்திலிருந்து தனது மகன் எப்போதும் மாறமாட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

இளம்வயதிலேயே தனது மகன் ஆதித்யநாத்துக்கு நல்லப் பேச்சாற்றல் இருந்ததாக கூறிய அவரது தந்தை ஆனந்த் சிங், தனது மகனின் பேச்சை கேட்க மக்கள் ஆர்வம் காட்டினார்கள் என்றார்.

மதத்துவேச அரசியலில் இருந்தும் ஹிந்து அடிப்படைவாதக் கொள்கைகளிலிருந்தும் தனது மகன் விலகிவிடுவார் என்று

தான், நம்பியதாகவும் ஆனால் அது பொய்த்துவிட்டதாக  அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.