சினிமாவை மிஞ்சும் காட்சிகள் – என்கவுண்டரை நேரடியாக ஒளிபரப்பிய போலீசார்

--

உத்தரப் பிரதேசத்தில் ஊடங்கள் முன்னிலையில் நேரடியாக ஒளிபரப்ப செய்து போலீசார், ரவுடிகளை என்கவுண்டர் செய்தது பெரும் சர்ச்சையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

encounter

உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக சார்பாக யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற பிறகு தொடர்ந்து என்கவுன்ட்டர் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் சுட்டுக்கொல்லுவதாக கூறப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் முஸ்டாக்கிம், நவ்சாத் ஆகிய இருவர் தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 கொலை சம்பவங்களில் அவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறி, போலீசார் தேடி வந்தனர். அவர்கள் இருவரையும் போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

நேற்று முஸ்டாக்கிம் மற்றும் நவ்சாத் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை போலீஸார் விரட்டிச் சென்றனர். அப்போது அலிகாரில் உள்ள பழைய கட்டடத்தில் அவர்கள் பதுங்கிக் கொண்டனர். இதையடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்த போலீசார், ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளுக்கும் தகவல் அனுப்பி அவர்களை வரவழைத்தனர்.

அந்த பகுதயில் போலீஸாருக்கும், ரவுடி கும்பலுக்கும் நடந்த சண்டையை ஊடகங்கள் நேரலையாக பதிவு செய்தன. இருதரப்பினருக்கும் இடையே நீண்டநேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறுதியாக ரவுடிகள் இருவரையும் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

ஊடகங்கள் முன்னிலையில் போலீசார் ரவுடிகளை சுட்டுக்கொன்று நேரலையாக ஒளிபரப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச போலீசாரின் இத்தகைய செயலுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆனால் என்கவுன்ட்டர் தொடர்பாக தாங்கள் எந்த தகவல்களையும் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை என உத்தரப் பிரதேச போலீஸார் மறுத்துள்ளனர். அதுபோலவே என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இருவரும் வீட்டில் இருந்தபோது போலீஸார் அழைத்துச் சென்று கொன்று விட்டதாக அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

You may have missed