ஃபெரோசாபாத்

த்தரப்பிரதேச மாநிலம் ஃபெரோசாபாத் மாவட்டத்தில் நடந்த காவலர் பயிற்சி வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஃபெரோசாபாத் மாவட்டத்தில் கடந்த 8 ஆம் தேதி அன்று காவல்துறை பயிற்சி ஒன்று நடைபெற்றது.   அயோத்தி தீர்ப்பை ஒட்டி நடந்த இந்த பயிற்சியில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.    இதில் குதிரை மீது சென்று கட்டுப்படுத்த பயிற்சி நடைபெற்றது.

இந்த பயிற்சியின் போது  குதிரைகள் இல்லாமல் இருந்ததால் பயிற்சியில் ஈடுபட்ட  காவலர்களைக் கற்பனையாகக் குதிரை சவாரி செய்வதைப் போல் நடிக்கச் சொல்லி பயிற்சி அளித்துள்ளனர்.   இது குறித்து வீடியோ ஒன்று பதியப்பட்டு  நெட்டிசன் அலோக் பாண்டே என்பவர் டிவிட்டரில் பதிந்துள்ளார்.

அந்த பதிவில் “இது ஃபெரோசாபாத் மாவட்டத்தில் கலவரத் தடுப்பு பயிற்சியில் நடந்துள்ளது.  அயோத்தி தீர்ப்பு குறித்து கலவரம் ஏற்படாமல் தடுக்க இப்பயிற்சி நடந்துள்ளது.   ஒரு முக்கிய கேள்வி,  இங்கு என்ன நடக்கிறது என யாராவது விளக்க முடியுமா? உண்மையில் இந்த பயிற்சி என்பது என்ன?” எனப்  பதிந்துள்ளார்.

நமது வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ

[youtube https://www.youtube.com/watch?v=kVf15r8aXJw?feature=youtu]