இந்தியாவில் உள்ள வட மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் மக்கள் தொகை 20 கோடி ஆகும். இதில், 6 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாடுகின்றனர்.
மற்றொருவரின் உயிர்க் காக்க நாம் இரத்த தானம் செய்வது பெருமைக்குரிய செயல். அதுவே, வறுமையின் காரணமாக, கஞ்சி குடிக்க வழியின்றி, பணத்திற்காக இரத்தத்தை விற்பது,  கொடுமையான செயலாகும்.
 
farmer suicide 1

தொடர்ச்சியாய்ப் பொய்த்துப்போனது வானம். விவசாயத்தை நம்பி எல்லாவற்றையும் இழந்து விட்டார்கள். இனி இழப்பதற்கு அவர்களிடம் எதுவும் இல்லை… எனவேதான் வறுமையின் பிடியில் சிக்கித தவிக்கும் உ.பி.
farmer suicide 2
மாநில‌த்தின் பண்டல்காண்ட் வட்டார விவசாயிகள் தங்கள் ரத்தத்தை விற்று உயிர் வாழவேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வடஇந்தியாவின் உ.பி.மாநிலத்தில் பட்கோவான் கிராமத்து விவசாயி கர்ணன்.  தொடர்ந்து  நிலவும் வறட்சியால்  தனது நிலத்தை நம்பி வாழமுடியாத நிலை அவருக்கு.   அவரிடம் விற்க இருக்கும் ஒரே பொருள் ரத்தம் மட்டுமே.  60 வயதான இந்த விவசாயி சொற்ப பணம் சம்பாதிப்பதற்காக தனது கிராமத்தில் இருந்து  ஜான்சி எனும் நகரத்திற்கு  ஒன்றரை  மணி நேரம் பயணம் செய்து வருகிறார்.  இந்நிலையில் விவசாயி கர்ணா சொல்வதை கேளுங்கள்…”.
blood donate 0 featured
“நான்  ஜான்சி நகரில் ஒரு தொழிலாளியாக இருந்துவருகிறேன்.இதைவைத்து குடும்பம் நடத்துவது என்பதே சிரமம். தொடர்ந்து  வேலை கிடைப்பதும் சிரமம். இந்த மாதிரி நேரங்களில் என் மகன் திடீரென நோய்வாய்ப்படும்போது, அவன் மருத்துவ சிகிச்சைக்காக நான் பண‌த்துக்கு எங்கே போவது? எனக்கு இருக்கும் ஒரே வழி என் ரத்தத்தை விற்று வருமானம் பார்ப்பதுதான். இதுதவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. இதற்காக  இங்குள்ள மருத்துவமனையில் என்னுடைய இரண்டு பாட்டில்கள் ரத்தத்தைக் கொடுத்தேன். அதற்காக மருத்துவமனை நிர்வாகம் எனக்கு  1,200 ரூபாய்  கொடுத்தது. இப்படித்தான் அவசரப் பணத் தேவையை நான் பூர்த்தி செய்து கொள்கிறேன்…” என்கிறார். இது விவசாயி கர்ணனின் வாழ்க்கை மட்டுமல்ல. பண்டல்காண்ட் வட்டாரப் பகுதியில் வாழும்  அனைத்து விவசாயிகளுக்கும் இதே கதிதான்.  சொல்லப்போனால்  இரத்தம் தான் இவர்களின்  புதிய பணப்பயிராக மாறிவிட்டது. ரத்தம் மட்டுமே இவர்களின் அவசரத் தேவையை பூர்த்தி செய்வதற்கான நிரந்தர உத்தரவாதமாய் மாறியிருக்கிறது.
மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு இடையே பிரிந்து கிடைக்கும் ஒரு மலைப்பாங்கான பகுதிதான் பண்டல்காண்ட். இங்கு பல ஆண்டுகளாக போதிய மழையில்லாமல் மக்கள் வறட்சியின் பிடியில் தவித்து வருகின்றனர்.
farmer-2
இப்பகுதியில் வித்தியாசமான வானிலை நிலவுகிறது அதாவது வறட்சி, ஆலங்கட்டி, வெப்பப் புயல், வழக்கத்திற்கு மாறாக சூடான குளிர்காலம்  இப்படி விவசாயத்தை பெருமளவு பாதிக்கும் பருவ நிலையே இங்கு காணப்படுகிறது. இதனால் விவசாயம் செய்து, பயிர் விளைச்சல் காண்ப‌து என்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறிவிட்டது. சொல்லப்போனால் இப்பகுதியின் வாழ்வாதாரமான விவசாயமே அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.
இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் இங்கு தலைவிரித்தாடுகிறது. இப்பகுதி விவசாயிகள் தங்கள் கிராமங்களை விட்டு அடிமட்டத் தொழிலாளிகளாக பக்கத்து நகரங்களுக்கு பயணம் செல்லத் தொடங்கி விட்டனர்.
விவசாய இழப்பை ஈடுகட்டும் அளவுக்கு அரசாங்கத்தரப்பிலிருந்து எவ்வித நிதி உதவிகளும் கிடைக்கப்பெறவில்லை.
” கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக எனக்கு  எந்த வேலையும்  கிடைக்கவில்லை, என் குழந்தைகளின் உணவுக்காக நான் என்ன செய்வது?” என்று புலம்புகிறார்கள் இப்பகுதி  விவசாயிகள் பலர்.
“பண்டல்காண்ட் வட்டார  விவசாயிகள் தொடந்து வறட்சியை சந்தித்து வருகின்றனர். வறுமையின் பிடியில் அவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். இதன் காரணமாக தங்கள் இரத்தத்தை விற்று  உயிர் வாழ்கிறார்கள் என்பது பெரும் கவலை அளிக்கும் ஒரு விஷயம்” என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஸ்டாக்ஹோம் விருது பெற்றவருமான ராஜேந்திர சிங்.
குளிர்கால மாதங்களில்  மோசமான வானிலையால் இந்தியாவின் சுமார் 40 சதவீத  விவசாயப்பயிர்கள்  பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்யவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். இதுபற்றிய விவசாயிகளின் போராட்டங்களுக்குகூட சில மாநில அரசுகள் அனுமதி கொடுக்காமல் ஒடுக்கிவிடுகின்றன.
அரசுத்துறை ஆவணங்களின்படி கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பண்டல்காண்ட் பகுதியில் 3200 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயத்தால் ஏற்பட்ட இழப்பும், அதனால் உண்டான கவலைகளுமே அவர்களின் தற்கொலைக்கு மிக முக்கிய காரணம். சொல்லப்போனால் பண்டல்காண்ட் வட்டாரம் என்பது விவசாயிகளின் சபிக்கப்பட்ட பூமியாக மாறியாகவிட்டது.அங்குள்ள விவசாயிகள்  வெறும் உப்பையும் ரொட்டிகளையும் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் அவலத்தில் உள்ளனர்.  உப்பும் கஞ்சியும் மட்டுமே இவர்களுக்கு இரவு என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.
மத்தியில் ஆட்சி மாறியது. இப்பகுதி மக்களின் வாழ்க்கையிலும் மாற்றம் வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் மோடியின் வாக்குறுதிகள் இப்பகுதி விவசாயிகளை இன்னும் எட்டியபாடில்லை.
” இதேபோன்ற சூழ்நிலை கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக நிலவி வருகிறது.வெறும் உப்பும் சப்பாத்தியும் மட்டுமே எங்கள் உணவாக மாறிப்போனது.இதே நிலைமைதான் நாளையும் தொடரும். 5 ஆண்டுகளாய் இதே நிலைதான். எங்களுக்கான உணவின் அளவு குறைந்து விட்டது.விவசாயம் முற்றிலும் பொய்த்துப்போய்விட்டது. சாலைபோடும் வேலையினை பத்து பதினைந்து நாட்களாக செய்து வருகிறேன். அதற்கும் இன்னும் சம்பளம் கிடைக்கவில்லை என்கிறார் மூன்றாவது குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஷ்யாமா. இவருடைய க‌ணவர் ஊரில் வாழமுடியாமல் பிழைப்புத்தேடி வெளியூருக்குச் சென்றுவிட்டார்.
இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தங்களின் வறுமை காரணமாக ரத்தத்தை விற்பது வருந்தத்தக்கது. இப்படி ரத்தம் விற்று உயிர் வாழும் பண்டல்காண்ட் பகுதி விவசாயிகளின் நிலைமை எப்போதுதான் மாறும்?