உ.பி.யில் பாஜக வென்றது எப்படி: திருமாவளவன் விளக்கம்

த்தரபிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றிருப்பது அதிர்ச்சியளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைப்பெற்ற தேர்தல்களில் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் பாஜக பெரும்பான்மையுடம் வெற்றி பெற்றுள்ளது.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி – காங்கிரஸ் கட்சிகள் இணைந்து போட்டியிட்டாலும் சமாஜ்வாடி மீது மக்களுக்கு நம்பகத்தன்மை குறைந்துவிட்டது எனவும், இதனால் வாக்குகள் சிதறி பாஜகவிடம் சென்றுள்ளது என்றும் தெரிவித்தார்.

சமாஜ்வாடி கட்சியின் குடும்ப பிரச்சனை மற்றும் உட்கட்சி பிரச்சனைகளின் காரணமாகவும், முலாயம் சிங் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு இடையேயான தந்தை மகனுக்கு இடையேயான அதிகாரப் போட்டியின் காரணமாகவும் மக்களிடையே பெரும் அதிருப்தியை பெற்று இருப்பதாக திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.