உ.பி.யில் அமைச்சருக்கு கொரோனா: டெல்லி மருத்துவமனையில் அனுமதி

--

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கலால் துறை அமைச்சர் ராம் நரேஷ் அக்னிஹோத்ரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதுகுறித்து அவர் கூறியதாவது: அக்டோபர் 6ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அன்றைய தினமே, டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன்.

இன்று செய்யப்பட்ட மறுசோதனையிலும் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. ஆகவே தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறேன். விரைவில் குணம் அடைந்து பணிக்கு திரும்புவேன் என்று தெரிவித்தார்.