லக்னோ:

உத்தரபிரதேசத்தில் 5 ஆவது கட்டத்தேர்தல் நாளை நடக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் உத்தரபிரதேச தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இங்கு 4 கட்டத்தேர்தல் ஏற்கனவே முடிந்துள்ள நிலையில் 5 ஆம் கட்டமாக 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

தேர்தலை சந்திக்கும் 51 தொகுதிகளும் அமேதி, சுல்தான்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ளன.

சமாஜ்வாடி–காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்காக 

முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும், பகுஜன் சமாஜ் கட்சிக்காக அதன் தலைவர் மாயாவதியும் புயல்வேக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பாஜக சார்பில் பிரதமர் மோடி முதலான பாஜக தலைவர்கள் முக்கிய நகரங்களில் தேர்தல் பரப்புரையாற்றினர். நேற்று மாலை 6 மணியுடன் 5 ம் கட்டதேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது.

நாளை காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தொடர்ந்து வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குச் சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.