க்னோ

பான் மசாலா மற்றும் குட்காவுக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு தடை விதித்துள்ளது.

வட மாநிலங்களில் பான்மசாலா மற்றும் குட்காவை மெல்லும் பழக்கம் அதிகமாக உள்ளது.  இதனால் பலர் உயிரிழப்பதாக எச்சரிக்கை விடப்பட்டும் அந்த பழக்கத்தை யாரும் கைவிடுவதில்லை.  கடந்த 2017 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி பொறுப்பேற்றதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பான்மசாலா மற்றும் குட்காவுக்கு தடை விதித்தார்.

ஆரம்பத்தில் மிகவும் கடுமையாக இந்த உத்தரவு கடைபிடிக்கப்பட்டது.  சிறிது சிறிதாக கட்டுப்பாடு குலைந்து மீண்டும் அரசு ஊழியர்கள் அலுவ்ல்கத்துகுள்ளேயே பான் மசாலா, குட்கா, புகையிலை போன்றவற்றை மெல்லும் பழக்கத்தைத் தொடர்ந்தனர்.  தற்போது கொரோனா பரவுதலால் இந்த பழக்கத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையொட்டி பான் மசாலா, குட்கா போன்றவை தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்படுத்தத் தடை விதித்து உத்தரப் பிரதேச மாநில உள்துறைக் கூடுதல் தலைமை செயலர் அவனிஷ்  அஸ்வதி  உத்தரவிட்டுள்ளார்.  இந்த உத்தரவு கொரொனா அச்சம் காரணமாக இடப்பட்டுள்ளதால் மக்கள் கீழ்ப்படிவார்கள் எனக் கூறப்படுகிறது.