அலகாபாத்: கான்பூர் நிகழ்ச்சியின்போது பிரதமர் நரேந்திர மோடி தடுக்கி விழுந்த படிக்கட்டை இடித்து சீரான உயரத்தில் கட்டுவதற்கு உத்திரப்பிரதேசத்தின் யோகி அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்திரப்பிரதேச கான்பூரில் ‘நமாமி கங்கா’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் மோடி. அப்போது, படகு பயணத்தில் பங்கேற்ற மோடி, கங்கை நதியை ஆய்வுசெய்துவிட்டு திரும்பினார். அப்போது படி ஏறிக்கொண்டிருக்கையில், ஓரிடத்தில் தடுமாறி குப்புற சாய்ந்தார்.

அப்போது அவரை உடன் வந்த எஸ்பிஜி வீரர்கள் சமாளித்துப் பிடித்தனர். மோடிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும்கூட, அப்படிக்கட்டின் உயரம் பிற படிகளுடன் ஒப்பிடும்போது சீரற்றதாக இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, அப்படியை மட்டும் இடித்து, அதன் உயரத்தை மற்ற படிகளுக்கு இணையாக அமைக்க அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படிக்கட்டின் சீரற்ற உயரத்தால், இதற்கு முன்னரே வேறுசிலர் இப்படி தடுமாறி விழுந்துள்ளர் என்று கூறுகின்றனர்.