லக்னோ: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து திட்டமிட, 17 பேர் கொண்ட குழுவை அமைக்கவுள்ளதாக உத்திரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த, மாநில அரசின் சார்பில் 17 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. முதல்வர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இக்குழுவுக்கு அம்மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா தலைவராகவும், மாநில அடிப்படைக் கல்வித்துறை அமைச்சர் சதிஷ் திவிவேதி துணைத் தலைவராகவும் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற உறுப்பினர்களாக கிரிஷ் சந்திர திரிபாதி, ரேணுகா குமார், ராதா சவுகான், மோனிகா எஸ் கார்க், ஆராதனா சுக்லா, அனில் ஸ்வரூப், அசோக் கங்குலி, வினய் குமார் பதாக், கிருஷ்ணா மோகன் திரிபாதி, அரவிந்த் மோகன், நிஷி பாண்டே, அப்பாஸ் நாயர், வசஸ்பதி மிஸ்ரா, கந்தல்வால், விஜய் கிரண் ஆனந்த் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.