12 மணி நேரத்துக்குள் அனைத்து காப்பகங்களை சோதனை இட உ. பி. அரசு உத்தரவு

லகாபாத்

த்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில் உள்ள அனைத்து காப்பகங்களையும் சோதனை இட அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் தியோரிய நகரில் ஒரு ஆதரவற்றோர் காப்பகம் உள்ளது.   இந்த காப்பகத்தை ஒரு கணவரும் மனைவியும் நடத்தி வந்துள்ளனர்.  அந்த காப்பகத்தில் இருந்து ஒரு சிறுமி தப்பி ஓடியதாக எழுந்த புகாரை ஒட்டி காவல்துறையினர் அந்த காப்பகம் சென்று விசரணை நடத்தி உள்ளனர்.  அப்போது அந்த காப்பகத்தில் இருந்த பெண்களில் ஒரு 16 வயது சிறுமி அதிர்ச்சி ஊட்டும் தகவல்களை கூறி உள்ளார்.

ரீடா பகுகுணா ஜோஷி

அந்த சிறுமி தினமும் காரில் அங்கு பலர் வருவதாகவும்  ஒவ்வொரு காரிலும் தங்களில் ஒருவரை வற்புறுத்தி அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  இந்த நிறுவனத்தை நடத்தி வரும் மோகன் திரிபாதி மற்றும் கிரிஜா திரிபாதி,  அவர்களின் உதவியாளர் காஞ்சன் லதா ஆகியோர் கைது செய்யபட்டுள்ளனர்.    இல்லத்தில் இருந்து 24 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர்.  ஆவணங்கள் மூலம் சுமார் 18 சிறுமிகள் மாயமானது தெரிய வந்துள்ளது.

அதை ஒட்டி உத்திரப் பிரதேச மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரீடா பகுகுணா ஜோஷி மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில் அமைந்துள்ள அனைத்து காப்பகத்தையும் சோதனை இட உத்தரவிட்டுள்ளார்.   மேலும் அடுத்த 12 மணி நேரத்துக்குள் அனைத்து காப்பகங்களையும் சோதனை இடவேண்டும் என அவர் கெடு விதித்துள்ளார்.