க்னோ

த்மாவதி திரைப்படத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை உண்டாகும் என உத்திரபிரதேச அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

பத்மாவதி என்னும் இந்தித் திரைப்படம் ராஜஸ்தான் மாநிலம் சித்தூரின் அரசி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.   இந்த படத்தில் தீபிகா படுகோனே, ஷாகித் கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.  இந்தப் படத்தில் அரசி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை தவறாக காண்பிப்பதாக தகவல் வெளியானது.  அதையொட்டி மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜபுத்திரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த படத்தை தடை செய்யக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.  இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடந்த ராஜஸ்தான் திரை அரங்கில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டு  போலீசார் வந்து தடியடி நடத்தி உள்ளனர்.   டீசர் வெளியீட்டு விழா பாதியில் நின்று போனது.  இதனால் படம் வெளிவருமா என்னும் சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது பா ஜ க ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசு இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என கூறி உள்ளது.  உத்திர பிரதேச அரசின் உள்துறை அமைச்சகம். “இந்தப் படம் வெளியானால் நாடு முழுவதும் சட்டம், ஒழுங்கு பிரச்னை உண்டாகும்.  படத்துக்கு சான்றிதழ் கொடுக்கும் முன் மக்களிடையே இந்த படத்துக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பையும்,  இந்த படம் குறித்து பலர் வெளியிட்ட கருத்து வேறுபாடுகளையும் நினைவில் கொள்ள வேண்டும்.   மேலும் உத்திர பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.  அதனால் இந்தப் பட வெளியீடு பெரும் பாதுகாப்பு பிரச்னையை உண்டாக்கும்” என மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.