உ.பி. முதல்வர் வார்டில் சுயேட்சை இஸ்லாமியர் வெற்றி!!

லக்னோ:

உபி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகிறது. இதில் ஆளும் பாஜக.வின் முதல்வர் தொகுதியான கோராக்பூரில் 68வது வார்டு உறுப்பினர் பதவியை சுயேட்சையாக போட்டியிட்ட இஸ்லாமியர் கைப்பற்றியுள்ளார்.

நாதீரா காதூன் என்ற அந்த நபர் யோகியில் சொந்த வார்டில் வெற்றி பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது யோகிக்கு கிடைத்த மிகவும் பின்னடைவாக கருதப்படுகிறது.

எனினும் மாநிலம் முழுவதும் கிடைத்த வெற்றி யோகி ஆதித்யாவின் செயல்பாடுகளுக்கு கிடைத்த அங்கிகாரமாக கருதப்படுகிறது. அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து யோகி கூறுகையில், ‘‘மாநிலத்தில் உள்ள 14 முதல் 16 மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘ இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும்’’ என்று தெரிவித்துள்ளார்.