லக்னோ:

த்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் சராசரியாக  64.22 சதவிகித வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 15 மாவட்டங்களில் உள்ள 73 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது.

73 தொகுதிகளில்   839 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 26 ஆயிரத்து, 823 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. 26,822 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. அங்கு மும்முனை போட்டி நடக்கிறது.

இன்று நடைபெற்ற தேர்தலில் பெரிய அளவில்  வன்முறை சம்பவங்கள் எதுவுமின்றி இந்த தேர்தல் அமைதியாக நடைபெற்றது.

ஒரு சில இடங்களில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கோளாறுகள் காரணமாக வாக்குப்பதிவு தாமதமானது.

இன்றைய முதல்கட்ட வாக்கு பதிவின்போது சராசரியாக 64.22 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

மேலும் வாக்குப்பதிவின்போது, 4.44 லிட்டர் மது கைப்பற்றபட்டுள்ளதாகவும், 20 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.