ரேபரேலி

ன்னாவ் பலாத்காரம் குறித்து புகார் அளித்த பெண் விபத்து வழக்கில் உ பி அமைச்சரின் மருமகன் அருண் சிங் என்பவர் பெயரை சிபிஐ சேர்த்துள்ளது.

உன்னாவ் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் தன்னை பாஜக சட்டப்பேரவை  உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் கூட்டு பலாத்காரம் செய்ததாகப் புகார் அளித்தார்.   அவரது தந்தை குல்தீப் சிங் ஆட்களால் தாக்கப்பட்டார்.  தாக்கப்பட்டவரை காவல்துறை கைது செய்து சிறையில் அவர் மரணம் அடைந்தார்.  இதற்கு நியாயம் கோரி அந்தப் பெண் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டு வாசலில் தீக்குளிக்க முயன்றார்.

அதன் பிறகு பலாத்கார வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.    குல்தீப் சிங் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.   இந்நிலையில் புகார் அளித்த பெண் ரேபரேலிக்கு தனது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞருடன் காரில் சென்றுக் கொண்டிருந்த போது லாரி விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  ஞாயிறு அன்று நடந்த விபத்துக்கு குல்தீப் சிங் காரணம் என பலரும் கூறி வருகின்றனர்.

தற்போது இந்த விபத்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.  தற்போது சிபிஐ இந்த விபத்து குறித்து வழக்கு  பதிவு செய்துள்ளது.  இந்த வழக்கில் சந்தேகத்துக்கு இடமானவராக உன்னாவ் பகுதியில் உள்ள நவாப்கஞ்ச் பகுதி பிரமுகர் அருண் சிங் பெயர் சேர்க்கபட்டுள்ளது.   அருண் சிங் உத்திரப் பிரதேச மாநில விவசாயத்துறை அமைச்சர் ரண்வேந்திர பிரதாப் சிங் கின் மருமகன் ஆவார்

அவருடன் குல்தீப் சிங்கின் சகோதரர் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.  இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார்.  தற்போது அரசுப் பணிகளின் ஒப்பந்த தாரராக உள்ளார்.   இவர்கள் இருவரைத் தவிர மேலும் 20 அடையாளம் தெரியாதோரும் இந்த குற்றத்துக்கு தொடர்புடையவர்கள் என சிபிஐ அறிவித்துள்ளது.