உ.பி.யில் கொடுமை: பெண்ஆசிரியையை கடத்தி, கும்பலுடன் பாலியல் வன்கொடுமை செய்த போலீஸ்காரர்

கோரக்பூர்:

உ.பி. மாநிலம் கோரக்பூர் அருகே பெண்ஆசிரியையை ஒருவரை கட்டாயப்படுத்தி சைக்கிளில் அமரவைத்து கடத்தி சென்ற போலீஸ்காரர் ஒருவர், அந்த பெண்ணை  கும்பலுடன் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் அந்த பகுதியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று தனது சகோதரி வீட்டுக்கு சென்றவர், திரும்பி வரும்போது,  போலீஸ்காரர்களால் மடக்கப்பட்டு உள்ளார். ஒரு போலீஸ்காரர்  அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி, தனது சைக்கிளில் அமர வைத்து அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், கோரக்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு அறையில் வைத்து, வன்புணர்வு செய்துள்ளார். அந்த போலீஸ்காரருடன் மேலும் பலரும், அந்த பெண்ணை சீரழித்து உள்ளனர்

சுமார் 2 நாட்கள் அந்த பெண்ணை கொடுமைப்படுத்திய நிலையில், அந்த இளம்பெண் வீட்டிற்கு அனுப்புங்கள் என்று கதறி உள்ளார். அதையத்தொடர்ந்து அந்த இளம்பெண்ணை கடுமையாக தாக்கிய போலீஸ்காரர், நள்ளிரவு 1 மணி அளவில், கையில் ரூ.600 கொடுத்து விடுவித்து உள்ளார்.

கடுமையான உடல் பாதிப்புக்கு உள்ளான அந்த இளம்பெண், சம்பவம் குறித்து  தனது குடும்பத்தினரிடம் கதற, அவர்கள் இளம்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் காவல்துறையில் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்தே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த  வட்ட அலுவலர் (சிஓஓ) கோட்வாலி வி.பி.சிங் மருத்துவமனைக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவரின் அறிக்கையை பதிவு செய்தார்.  குற்ற சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அந்த இளம்பெண்ணை  அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அந்த பெண் அடைக்கப்பட்டிருந்தது ஒரு ஹோட்டல் அறை என்றும், அதை யார் பதிவு செய்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுவதாக, மூத்த போலீஸ் சூப்பிரண்டு  சுனில் குமார் கூறினார் குப்தா தெரிவித்து உள்ளார்.

ஆனால், சம்பந்தப்பட்ட காவலரோ, அந்த  பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீசார் குற்றம் சாட்டி உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.